இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கும் அவசர அறிவித்தல்

இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கும் அவசர அறிவித்தல்

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய சிலர் இரத்தினபுரி மாவட்டத்திற்கும் விஜயம் செய்துள்ளமையால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த சிலர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் நிவித்திகல, உடவல, கிரியெல்ல மற்றும் இம்புல்பே பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இரத்தினபுரி மாவட்ட மக்கள் முடிந்தவரை வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துமாறு மாவட்டச் செயலாளர் மாலினி லொகுபோதாகம கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டாலும் கொரோனா ஆபத்து இருப்பதால் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி நேர வகுப்புகளையும் இடைநிறுத்த மாவட்ட கொரோனா பணிக்குழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை குறித்த மாவட்டத்தில் இதுவரை 55 பேர் சுயதனிப்மைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.