Breaking News
Home / latest-update / 75 லட்சம் மதிப்பிலான கேரளா கஞ்சா காருடன் பறிமுதல் – ஒருவர் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

75 லட்சம் மதிப்பிலான கேரளா கஞ்சா காருடன் பறிமுதல் – ஒருவர் கைது

ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்து முக்கிய கடத்தல்காரரை தேடிவருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதியை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், கார் நிற்காமல் சென்றதையடுத்து பொலிஸார் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்து மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 75 லட்சம் மதிப்பிலான 85 பார்சல்களில் இருந்த 165 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல் செய்த பொலிஸார் தொண்டி பகுதியைச் சேர்ந்த அலி என்பவரை கைது செய்து காரில் இருந்து தப்பிச் சென்றவர் யார் எனவும் முக்கிய கடத்தல்காரர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …