Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / 4 வயது குழந்தைக்கு எமனான பூந்தொட்டி! இன்று மதியம் இடம்பெற்ற சோக சம்பவம்
https://www.facebook.com/esoftjaffna/

4 வயது குழந்தைக்கு எமனான பூந்தொட்டி! இன்று மதியம் இடம்பெற்ற சோக சம்பவம்

வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியொன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மாரவில காவ்றதுறை தெரிவித்துள்ளது.

நாத்தன்டிய – துன்கன்னாவ , பண்டாரநாயக்கபுர பகுதியை சேர்ந்த 04 வயதுடைய ஆண் குழந்தையொன்றே இதன் போது உயிரிழந்துள்ளது.

இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தை குறித்த பூந் தொட்டியில் ஏற முயற்சித்துள்ள நிலையில் , அது உடைந்து வீழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பூந்தொட்டி அமைக்கப்பட்டிருந்த கொங்ரீட் தூணில் குழந்தை சிக்குண்ட நிலையல் , குழந்தையின் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் , சிகிச்சைக்காக குழந்தை உடனடியாக மாரவில ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Check Also

ஒவ்வொரு ராசிகாரர்களிடமும் காணப்படும் ஈர்க்கும் குணம் என்னவென்று தெரியுமா…? உங்கள் ராசிக்கு என்ன குணம்

ஒவ்வொரு ராசிக்கும் பொது பலன் என்று ஒன்றிருப்பதை போல ஒவ்வொரு ராசியிடமும் காணப்படும் ஈர்ப்புடைய விஷயம் எது என்பது பற்றி …

Leave a Reply

Your email address will not be published.