Breaking News
Home / latest-update / 14 வயது சிறுவன் முட்டையிடும் அதிசயம்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

14 வயது சிறுவன் முட்டையிடும் அதிசயம்!

இன்றைய தேதிக்கு நாளுக்கு நாள் விசித்திரங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இயற்கையாக இது சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் அரங்கேறி வருகிறது. அறிவியல் பூர்வமாக காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கப்படும் வரை அது ஒரு மர்மமான விஷயமாகவே இருக்கிறது. இப்போதும் அப்படியான ஒரு மர்மத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறீர்கள். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது என்று தெரியும். நல்லது தான் ஆனா விக்கிற விலவாசிக்கு எங்கயிருந்து தினம் முட்டை? யோசிப்பவர்கள் தவறாமல் இந்த செய்தியை படித்திடுங்கள். பதினான்கு வயதுடைய சிறுவன் ஒருவன் முட்டையிடுகிறானாம்…. இந்தோனேஷியாவில் உண்மையிலேயே நடந்த இந்த சம்பவத்தைப் பற்றி….

#1 இந்தோனேஷியா நாட்டின் தெற்கு சுலவேசி ப்ராவின்ஸ் அருகில் இருக்கக்கூடிய கபுபேட்டன் கோவா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுவன் அக்மல் ருஷ்லி. இவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்போது தன்னுடைய பிறப்புறுப்பு வழியாக இரண்டு முட்டைகளை இட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.#2 அதோடு கடந்த இரண்டு வருடங்களில் தான் இதுவரை பதினெட்டு முட்டை இட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்கிறதாம். மகனிட்ட முட்டையை தந்தை பார்த்திருக்கிறார். தந்தை கூறுகையில் மகன் இட்ட இரண்டு முட்டைகளை நான் பார்த்தேன் அது பார்க்க கோழியின் முட்டை வடிவத்திலியே இருந்தது என்று சொல்லியிருக்கிறார்.

#3 தந்தை மகனிட்ட முதல் முட்டையை உடைத்துப் பார்த்திருக்கிறார் அது முழுவதும் மஞ்சள் நிறத்துடனே இருந்திருக்கிறது. வெள்ளைக்கரு இருந்திருக்கவில்லை. மருத்துவர்களே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம். மனித உடலிலிருந்து முட்டை வெளிவருவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்று அடித்துச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

#4 மருத்துவர்கள் இதனை சந்தேக கண்ணோட்டத்துடன் தான் அணுகியிருக்கிறார்கள். யாரும் தன்னை கவனிக்காத போது தன்னுடைய மலக்குடலில் முட்டையை வைத்திருக்க வேண்டும் பின்னர் அதனை உந்தித்தள்ளி வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த நிகழ்வு இப்படித்தான் நடக்கிறதா என்று எங்களுக்கு தெரியவில்லை நாங்கள் யாருமே இதனை நேரில் பார்த்ததில்லை.#5 அந்த முட்டையை பரிசோதனை செய்ததில் அந்த முட்டை கோழியின் முட்டை என தெரியவந்திருக்கிறது. ஒருவர் முழு முட்டையை அப்படியே விழுங்க முடியாது. அப்படியே விழுங்கினாலும் ஜீரண உறுப்புகளை எல்லாம் கடந்து வரும் போதே கரைந்து கழிவாகத்தான் வெளிவரும் இப்படி முழு முட்டையாக வெளி வர வாய்ப்பே இல்லை என்றிருக்கிறார்கள்.

#6 ஆனால் இதனை சிறுவனின் தந்தை மறுத்திருக்கிறார். அவன் முட்டையை முழுங்கவும் இல்லை, தானாக வைத்துக் கொள்ளவும் இல்லை என்று ஆணித்தரமாக கூறியதையடுத்து ஒரு வார காலம் தனிமையில் வைத்து கண்காணிக்க மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

#7 அதோடு தான் தன்னுடைய கிராமத்தில் மதகுருவாக இருப்பதாகவும் அதனால் மகனுக்கு பில்லி சூனியம் எதுவும் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மனிதனால் சாத்தியமில்லை என்றாலும் இந்த நிகழ்வு கேட்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

#8 மருத்துவமனையில் சேர்த்த போது வயிற்றில் எக்ஸ் ரே எடுத்து பார்க்கப்பட்டது அப்போது சிறுவனின் அடிவயிற்றில் முட்டை போன்ற வடிவத்தில் இரண்டு இருந்திருக்கின்றன. மகன் தொடர்ந்து வயிற்று வலி என்கிறான் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன் என்று சொல்லியிருக்கும் சிறுவனின் தந்தை இதற்கு முன்னர் பதினெட்டு முட்டைகளை இட்டுருக்கிறான் என்றும் தெரிவித்திருந்தார்.

#9 இதைக் கேள்விப்பட்ட இந்த மருத்துவர்கள், இதனை கார்பஸ் ஏலினியம் என்று வர்ணிக்கிறார்கள். அதாவது சம்மந்தமே இல்லாத பொருட்களை உடலில் சேர்த்துக் கொள்வது, முட்டை, ஊசி, மண், போன்ற பொருட்களை எல்லாம் தங்களையும் அறியாமல் முழுங்குவார்கள்.அதோடு இந்தோனேஷியாவில் இந்தப் பழக்கம் சாதரணமாகவே இருக்கிறதாம். இது ஒரு வகை மனக்குறை என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்

#10 இந்தோனேஷியாவில் மனிதன் முட்டையிடுவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு வடக்கு ஜகார்டா அருகிலிருக்கும் டன்ஜுங் வாங்கி என்ற பகுதியைச் சேர்ந்த ககேக் சினின் முதியவர் தான் முட்டையிடுவேன் என்று சொல்லி அதிர்ச்சியை கிளப்பினார். எப்போதும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் முட்டையிடுவேன் ஆனால் இந்த மாதம் ஒரே மாதத்தில் மூன்று முட்டைகளை இட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

#11 அப்போது பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அது கோழியிட்ட முட்டை தான் என்றும் அதில் இரண்டு வாரக் கரு இருக்கிறது என்றும் தெரிவித்தார்கள் அதோடு ககேக் இந்த முட்டையை இட்டிருக்க வாய்ப்பில்லை காரணம், இவ்வளவு பெரிய முட்டை அவரது பிறப்புறுப்பிலிருந்து வெளிவர வேண்டுமெனில் பிறப்புறுப்பு பெரிதாக விரிந்திருக்க வேண்டும் ஆனால் அந்த அடையாளமே இல்லை என்றிருக்கிறார்கள். ககேக் தனக்கு மந்திர சக்தி இருப்பதாகவும், அதனால் பல அற்புதங்களை செய்வதாகவும் கற்பனை செய்து கொள்கிறார் அதன் வெளிப்பாடு தான் இந்த முட்டை என்றும் சொல்லப்படுகிறது.

Check Also

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …