Breaking News
Home / latest-update / 1.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

1.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது

1.7 மில்லியன் ரூபா பெறுமதியான 5 தங்க பிஸ்கட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனையை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (12) அதிகாலை 2.45 மணியளவில் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்த QR 668 என்ற விமானத்திலேயே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சுமார் 1,749,300 ரூபாய் பெறுமதியுடைய 291.55 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின், கைது செய்யப்பட்ட நபருக்கு 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …