Breaking News
Home / latest-update / வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் பரிதாபமான பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் பரிதாபமான பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

காரைநகர் களபூமி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.

காரைநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கோயில் திருவிழாவில் பங்கேற்கும் முகமாக யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று காலை கோயிலுக்கு சென்ற வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியருகே இருந்த பனை மரத்துடன் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …