Breaking News
Home / latest-update / வெலிக்கடை பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வெலிக்கடை பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் கைது

வெலிக்கடை பொலிஸ் பிரிவில் கொட்டா வீதியில் உள்ள இடம் ஒன்றில் இயங்கிய பாலியல் தொழில் நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட தேடுதல் அனுமதிக்கு அமைய நேற்று பிற்பகல் மேற்கொண்டு முற்றுகையின் போதே இந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் தொழில் நிலையத்தின் முகாமையாளராக செயற்பட்ட பெண் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஆகியோரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 31 வயதான இந்த பெண்கள் மினுவாங்கொடை மற்றும் ராகமை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து வெலிகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …