Sunday , February 18 2018
Breaking News
Home / latest-update / வெட்ட வெளியில் பரீட்சை எழுதிய மாணவர்கள் – தொடரும் அவலங்கள்…!
https://www.facebook.com/esoftjaffna/

வெட்ட வெளியில் பரீட்சை எழுதிய மாணவர்கள் – தொடரும் அவலங்கள்…!

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் திகாம் நகரில் அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. வருடந்தோறும், இந்தப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரால், கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கலைநிகழ்ச்சி நேற்று நடந்துள்ளது.

ஆனால், இதனை அறிந்திராத மாவட்ட நிர்வாகம், இதே நாளில் மாணவர்களுக்கு தேர்வு குறித்த அட்டவணையும் தயார் செய்து வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளி மைதானத்தில் கலைநிகழ்ச்சியை முன்னிட்டு வண்ணமிகு அலங்காரங்கள், கலர் கலராக பலூன்கள் என்று கட்டப்பட்டிருந்தது.




இதையடுத்து, தேர்வை மற்றொரு நாளுக்கு மாற்ற இயலாததால் மாணவர்கள் மொட்டை மாடியில் அதுவும் வெயிலில் தேர்வு எழுதியுள்ளனர்.

மேலும், மைதானத்தில் நடந்த கலைநிகழ்ச்சியின் போது பாட்டு, விசில் என்று மைதானமே அலறியுள்ளது. இதற்கிடையில், இந்த சப்தத்தை கேட்டுக்கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கடந்த வருடம் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஸாபூரில் உள்ள ஒரு பள்ளியில், டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ரக்‌ஷாபந்தன் என்பதால், அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த டான்ஸ் நிகழ்ச்சியின் போது, பெண்கள் போஜ்பூரி நடனங்களை ஆடினர். அவர்கள் மீது பணமழை பொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About admin

Check Also

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *