Breaking News
Home / latest-update / விரைவில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

விரைவில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

நடைப்பெற்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் படுதோல்விக்கான முக்கிய பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார்.

சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் நேற்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.




இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, உள்ளூராட்சித் தேர்தல் மூலம் பொதுமக்கள் மாற்றமொன்றை எதிர்பார்ப்பது குறித்து தெளிவாக உணர்த்தியிருக்கின்றனர்.

கட்சியை மீள கட்டியெழுப்பும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும்.அதற்காக பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மிக விரைவில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …