Home / latest-update / வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நான்கு பேர் மானிப்பாய் பொலிஸாரால்கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நான்கு பேர் மானிப்பாய் பொலிஸாரால்கைது

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளையடுத்து பொலிஸ் ரோந்து, பொலிஸ் காவல் என்பன பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட பொலிஸ் சுற்றுக் காவலின் போதே நேற்றிரவு வாள்கள் இரும்புக் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Check Also

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் …