Wednesday , April 25 2018
Breaking News
Home / latest-update / வாட்ஸ் அப் செயலியின் புதிய பணப்பரிமாற்ற சேவை..!!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

வாட்ஸ் அப் செயலியின் புதிய பணப்பரிமாற்ற சேவை..!!!

வாட்ஸ் அப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி விரைவில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ் அப் செயலிக்கு வழங்கப்படும் என்கின்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் ,இந்த பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் ஏற்கனவே சோதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் யுபிஐ (UPI) சார்ந்த வழிமுறையை செயல்படுத்த இப்போது வாட்சப் நிறுவனம் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது .

இந்த வாட்ஸ் அப் செயலி. வாட்சப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை பொறுத்தவரை, அடுத்த மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்தியாவின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்சப் திட்டமிட்டுள்ளது.

வியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த Whats App Business செயலியை அறிமுகம் செய்துள்ளது வாட்சப் நிறுவனம். இந்த Whats App Business செயலியின் முக்கிய அம்சம் என்னவென்றால், வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

Whats App Business செயலியில் உள்ள Profile அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைதளம் அதன்பின்பு வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. Messaging Tools, messaging statistics, Files, Whats App Web மற்றும் Account Type போன்ற வசதிகள் Whats App Business செயலியில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பொறுத்தவரையில் முதற்கட்டமாக Android வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக இந்த Whats App Bussiness செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களில் மற்ற நாடுகளுக்கும் இந்த Business செயலி வழங்கப்படும்.

Check Also

சிபிராஜின் அடுத்த படம்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …