Breaking News
Home / latest-update / வவு. புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் போராட்டம் வெடிக்கும்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

வவு. புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் போராட்டம் வெடிக்கும்!

வவுனியாவில் புதிதாக அமை க்கப்பட்ட பேருந்து நிலையத்திலிரு ந்து அனைத்து சேவைகளும் இடம் பெற்றால் போராட்டம் வெடிக்குமென வவுனியா வர்த்தக சங்க காரியால த்தில் நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் போது மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துச் சேவை ஆகியவற்றிக்கி டையில் கடந்த 04.02.2017 அன்று வவுனியாவில் புதிய பேருந்துத் தரி ப்பிடம் தொடர்பாக ஏற்;பட்ட முரண் பாடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ் கலந்துரையாடலின் போது இரண்டு சேவைகளுக்குமான புதிய இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரை அவர் கள் புதிய பேருந்து நிலையம் அமைக்கப் படும் வரை கடந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ் விடங்களில் இரு ந்து சேவைகள் தொடர அனுமதிக்கப்படுகி றது. அது வரை தற்காலிகமாக புதிய பேரு ந்து நிலையம் மூடப்பட்டிருக்குமெனவும் இணைந்த நேர அட்டவணை தயாரித்து வழங்கப்பட்டவுடன் இரு தரப்பினரும் மாவ ட்டங்களுக்கிடையிலான சேவைகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்பட வேண்டும்.

வவுனியா மாவட்டத்தினுள் உள்@ர் சேவைகளும் பழைய பேருந்து நிலைய த்திலிருந்து வெளியூர் சேவைகளும் செயற் பட வேண்டுமெனவும் அதன் பிரகாரம் செயற்படாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடி ககை எடுப்பதற்கு இரு தரப்பினராலும் ஒத் துக்கொள்ளப்பட்டது.

நாளை 25ஆம் திகதி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச சேவைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ள நிலையிலேயே இவ் கலந்துரையாடல் இடம் பெற்றது.

முற்றும் முழுதாக புதிய பேருந்து நிலை யத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இடம்பெறாமல் உள்@ர் சேவைகள் தற் போது உள்ள இலங்கை போக்குவரத்து சபை பேரு ந்து நிலையத்திலிருந்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சேவைகள் இடம்பெறுவதுடன்,

உள்@ர் சேவைகள் தற்போது உள்ள பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நின்று புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதுடன் வெளியூர் சேவைகள் புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்று தற் போது உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண் டும்.

அவ்வாறு செயல்முறைபடுத்தப்பட்டால் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட 3500க்கு மேற்பட்டவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். எமக்கு புதிய பேருந்து நிலை யம் செயற்முறைப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றோம். வர்த்தகர் கள் மற்றும் பொதுமக்கள் பாதிப் படையாத வண்ணம் நடைமுறைப்படுத்துமாறும் அவ் வாறு செயற்முறைப்படுத்தப்படாவிட்டால் போராட்டம் வெடிக்குமென வர்த்தக சங்கத்தி னர் மேலும் தெரிவித்தனர்.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …