Breaking News
Home / latest-update / வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள கிளிநொச்சி கல்வி வலயத்தில் வெற்றிடமாகக் காணப்படும் வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை  தரம் 1 ஐச் சேர்ந்தவர்களிடமிருந்து  மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கமாறு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி ரூ.வரதலிங்கம் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய க.முருகவேல் அண்மையில் சேவையிலிருந்து  ஓய்வு பெற்றதையடுத்து தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக, கிளிநொச்சி கல்வி வலயத்தில் மேலதிக கடமைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது

Check Also

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி!!

சற்று நேரத்தின் முன் யாழ் நவீன சந்தைக் கட்டடங்களை இணைக்கும் பாலத்தின் அடியில் பாரவூர்தி ஒன்று சிக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த …