Breaking News
Home / latest-update / வடமராட்சியில் பட்டப் பகலில் 16 பவுண் நகைகள் துணிகரத் திருட்டு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வடமராட்சியில் பட்டப் பகலில் 16 பவுண் நகைகள் துணிகரத் திருட்டு

யாழ்.வடமராட்சி கரணவாய் மத்தியிலுள்ள பாடசாலை வீடொன்றுக்குள் பட்டப் பகல் வேளையில் உள்நுழைந்த திருடர்கள் 16 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

யாழ்.வடமராட்சி கரணவாய் மத்தியிலுள்ள பாடசாலை வீடொன்றுக்குள் பட்டப் பகல் வேளையில் உள்நுழைந்த திருடர்கள் 16 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(11) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்ற சமயம் வயோதிபப் பெண்ணொருவர் மாத்திரம் வீட்டில் தனித்திருந்த வேளையில் குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது அங்கு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, காப்பு உள்ளிட்ட பதினாறு பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …