Breaking News
Home / latest-update / வடக்கில் மாணவிகளுடன் பாலியல் லீலை புரியும் ஆசிரியர்களுக்கு நலம் எடுக்க ஆயத்தம்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வடக்கில் மாணவிகளுடன் பாலியல் லீலை புரியும் ஆசிரியர்களுக்கு நலம் எடுக்க ஆயத்தம்!!

வடக்கு மாகாணத்தில் மாணவிகளுடன் பாலியல் லீலைகள் புரியும் ஆசிரியர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்களா? நிச்சயமாக இல்லை. எனவே அவற்றைத் தடுக்கும் வகையில் பொறிமுறை ஒன்றை வடக்கு மாகாண சபை உருவாக்கவேண்டும்”

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் இன்று இடம்பெற்றது.

கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் பற்றிய விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதந்து கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்ககவேண்டும். பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் போதிய வசதிகளுடன் கட்டடங்கள் அமைக்கவேண்டும்” என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

புவனேஸ்வரன் சபையில் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் இடையில் குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நலமடிக்க வேண்டும் என வெளிப்படையாகவே தெரிவித்தார்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …