Home / latest-update / லூபஸ் நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

லூபஸ் நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை

லூபஸ் நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை

லூபஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்மறையாக மாறுவதால் வருவது. சில சமயங்களில், நமது உடலில் இயங்கும் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு எதிராக உடல் உறுப்புக்களை, திசுக்களை, பாதிக்கிறது. உடலின் வெவ்வேறு பாகங்களையும் பாதிக்கலாம். குறிப்பாக தோல், மூட்டுக்கள், சிறுநீரகங்கள், மூளை, இதயம், நுரையீரல், ரத்த அணுக்கள் ஆகியன பாதிக்கப்படலாம்.

இந்நோயின் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளைப் போன்று இருப்பதால் இந்நோயைக் கண்டறிவது சிரமம். பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும் அறிகுறி வணத்துப்பூச்சி சிறகடிப்பது போல இரு கன்னங்களிலும் காணப்படுவதாகும்.

சிலர் பிறக்கும்போதே இந்நோய் வருவதற்கான அறிகுறியுடன் காணப்படுவர். அது சில மருந்துகள், நோய்த் தொற்றுக்கள், சூரியஒளி காரணமாகத் தூண்டப்பட்டு அதிகமாகும். முழுவதும் குணப்படுத்த முடியாத நிலையில், இந்நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

அறிகுறிகள் :

பாதிக்கப்பட்ட இடங்களைப் பொறுத்து, இந்நோயின் அறிகுறிகள் மாறுபடும். காய்ச்சல், மூட்டுக்களில் வலி, வீக்கம், இறுக்கம், கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவில் நிறமாற்றம்.

* சூரியஒளி படும்போது தோல் சிவந்து, கறுத்துப் போதல்.
* விரல்கள், பாதங்கள் வெளிறிப் போதல் அல்லது நீல நிறமாகி விடுதல் (குளிர் படும் போது அல்லது மன அழுத்தம் அதிகமாகும் போது)
* மூச்சுவிடச் சிரமம் ஆதல்,
* நெஞ்சுவலி
* கண்களில் வறட்சி
* தலைவலி, குழப்பம், ஞாபக மறதி ஆகியன தென்படும்.

பின் விளைவுகள் :

* இந்நோய் தீவிரமாகும் போது உடலின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.
* மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மூளை பாதிக்கப்பட்டால் தலைவலி, மயக்கம், பார்வைக் குறைபாடுகள், தலைசுற்றல், பக்க வாதம், நடைமுறையில் மாற்றங்கள், குழப்பங்கள் நேரலாம்.
* ஞாபக மறதி, எண்ணங்களை வெளிப் படுத்துவதில் குறைபாடு நேரலாம்.
* ரத்தம், ரத்தக் குழாய் சம்பந்தமான நோய்கள், அதாவது ரத்தசோகை, ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு, ரத்தக் குழாய்கள் வீக்கம் (உப்புதல்) ஆகியன.
* நுரையீரல் நோய்கள், நுரையீரல் உறைகளில் வீக்கம் நேர்ந்து, மூச்சுவிடச் சிரமம் ஆகும். நிமோனியா வரலாம். நுரையீரலில் ரத்தக் கசிவு நேரலாம்.
* இதயத்தின் தசைகளில், ரத்தக் குழாய் களில் இதயத்தைச் சுற்றியுள்ள உறையான பெரிகார்டியத்தில் வீக்கம் வரலாம், இதய அடைப்பு வரலாம்.

பிற பின் விளைவுகள்:

* இவ்வியாதி காரணமாக நோய்த்தொற்று அதிகம் ஏற்படலாம்.
* புற்றுநோய் வர, குறைந்த வாய்ப்புள்ளது.
* எலும்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும், அதனால் எலும்புகள் உடை யும் அபாயம் நேரலாம்.
* பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு அதிகம். அதனால் கர்ப்பச்சிதைவு ஏற்படவும், குழந்தை உரிய நேரத்துக்கு முன்பே பிறக்கவும் வாய்ப்பு அதிகம். ஆகவே இந்நோய் குணமாகும் வரை கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது.

மருந்துகள்:

குடூச்சியாதி கஷாயம், தீக்தகம் கஷாயம், தாடிமாதி கஷாயம், சுகுமார க்ருதம், மஹாதிக்தக க்ருதம், ஆரோக்கிய வர்த்தினி வடி ஆகியன சாப்பிடலாம்.
மேலே போட
* ‘பஞ்சதிக்தக திரவியம்’ சேர்த்துக் காய்ச்சிய பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் ஊற்றலாம். (தாரா).
* சீந்தில் கொடியைச் சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.
* தா வரி சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.

“சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் இது சொரியாஸிஸ், ஆர்த்தரைட்டிஸ் (வாதம்) இரண்டும் சேர்ந்த வியாதி ஆகும்.
தோலில் சிவந்த தடிப்புகளும் அதன் மேலே வெள்ளிபோன்ற நிறமுடைய செதில்களும் காணப்படும். பெரும்பாலான மக்களுக்கு, முடிவில் சொரியாஸிஸ் வரும் பிறகு சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் ஆக உணரப்படும்.
அவை விரல் நுனி, முதுகுத் தண்டு போன்று உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கும்.
இந்நோயை குணப்படுத்த முடியாது, நோயைக கட்டுக்குள் வைக்கலாம்.

உடலின் ஒரு பாகத் திலுள்ள மூட்டுக்ளையோ அல்லது (இடது, வலது) இரு பக்கத்திலுள்ள மூட்டுக்களையோ பாதிக்கலாம். இந்நோயின் அறிகுறிகள் “ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்” நோயைப் போன்றே இருக்கும். இரு நோய்களிலும் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு வலி, வீக்கம் ஆகியன இருக்கும்.
மேலும், சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ், விரல் களிலும், பாதங்களிலும் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும். மூட்டுக்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் தோன்றுமுன்பே, கை, கால்களில் வீக்கம், அசாதாரண மாற்றம் தோன்றம்.

பாதத்தின் அடியிலோ, பாதத்தின் பின்பகுதியிலோ தசை, தசைநார் ஆகியவை எலும்புடன் இணையும் இடத்தில் வலியை உண்டாக்கும்.
சிலருக்கு “ஸ்பாண்டி லைட்டிஸ்” எனப்படும் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் வலி வரும். முதுகுத் தண்டின் கண்ணிகளுக்கிடையே வீக்கம் வரும். முதுகுத்தண்டு மற்றும் இருப்புக்குமிடையே இருக்கும் மூட்டுக்களிலும் வீக்கம் வரும். சில சமயங்களில் தோல் செல்களின் உற்பத்தி அதிகம் ஆகும்.
நோய் எதிர்ப்பு சக்தி ஏன் எதிராக மாறுகிறது என்பது முழுவதும் அறியப்படாவிட்டாலும், பரம்பரை, சூழ்நிலை ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘சொரியாடிக் ஆர்த்தரைட்டிஸ்’ நோய் வந்தவர்கள் குடும்பத்தில் யாருக்காவது சொரியாஸிஸ் அல்லது சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் நோய் முன்பே வந்திருக்கும்.

பிறப்பிலேயே இந்நோய் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அமையப் பெற்றவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பால் வைரஸ், பாக்டீரியா தோற்று ஏற்பட்டாலோ இந்நோய் சீக்கிரம் வந்து விடலாம். நோய் தீவிரமாகும் போது கையின் சிறு எலும்புகள் முழுவதும் சேதமடையலாம். கண்நோய்கள் வரலாம். இதயநோய்கள் வரலாம்.

சிகிச்சை, மருந்துகள்

உள்ளே சாப்பிட

மஞ்சிஷ்டாதி கஷாயம், மாணிபத்ர லேகியம், குடூச்சியாரி கஷாயம், கல்யாணகம் கஷாயம், கைஷோர குக்குலு, ஆரோக்கிய வர்த்தினிவடி ஆகிய உள்ளே சாப்பிடலாம்.

வெளியே போட

தசமூல கஷாயத்தில் பத்து போடலாம், தாரா செய்யலாம்.

Check Also

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் …