Thursday , February 22 2018
Breaking News
Home / latest-update / ராசியான அடிலெய்டு ஓவல் மைதானத்தில் திருமணம் செய்யுங்கள்: விராட் கோலிக்கு அழைப்பு
https://www.facebook.com/esoftjaffna/

ராசியான அடிலெய்டு ஓவல் மைதானத்தில் திருமணம் செய்யுங்கள்: விராட் கோலிக்கு அழைப்பு

ராசியான அடிலெய்டு ஓவல் மைதானத்தில் திருமணம் செய்யுங்கள்: விராட் கோலிக்கு அழைப்பு

இந்திய அணி கேப்டனாக திகழும் விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். 29 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மைாவை காதலித்து வருகிறார்.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுமுன்தினம் முடிந்தது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து வீராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி வருகிற 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா புறப்படுகிறது.
தற்போது விராட் கோலிக்கு சுமார் 20 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த இடைவெளியில் தனது காதலியுடன் இத்தாலி சென்று அங்குள்ள புகழ்பெற்ற நகரான மிலனில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விராட் கோலி தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான அடிலெய்டு ஓவல் மைதானத்தின் நி்ர்வாகம், விராட் கோலியை இந்த மைதானத்தில் வைத்து திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அடிலெய்டு ஓவல் மைதான சிஇஓ ஆன்ட்ரிவ் டேனியல்ஸ், ‘‘விராட் கோலி – அனுஷ்கா திருமணம் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றால் அது எங்களுக்கு த்ரில்லாக இருக்கும். அடிலெய்டு மைதானத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலிக்கு, இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அதிக மகிழ்ச்சியான நினைவுகளை கொடுக்கும்’’ என்றார்.
2012-ல் அடிலெய்டில் முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலி, மூன்று சதங்கள் விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோர் ஆன 90 (அவுட்இல்லை) ரன்களை இங்குதான் அடித்தார். 8 இன்னிங்சில் 624 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 89 ஆகும்.
150 வருட கால பாரம்பரியமான அடிலெய்டு ஓவல் மைதானம் சமீபத்தில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான பகல் – இரவு ஆஷஸ் டெஸ்ட் போட்டியை 2 லட்சம் ரசிர்கள் நேரில் வந்து ரசித்துள்ளனர். அடிலெய்டு மைதானம் கிரிக்கெட் போட்டி நடைபெறாத காலத்தில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கு வருகிறது.

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.