Breaking News
Home / latest-update / ரபாடாவிற்கு பதிலடி கொடுத்த கோலி – வைரலாகும் வீடியோ!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

ரபாடாவிற்கு பதிலடி கொடுத்த கோலி – வைரலாகும் வீடியோ!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

கடந்த 1-ந் திகதி டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய தென்ஆப்பரிக்க 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்தபோது ககிசோ ரபாடா வீசிய பந்து ஓன்று கோலியின் பேட்டில் பட்டு விலா பகுதியில் பலமாக தாக்கியது.

இதில் கோபமடைந்த கோலி, ரபாடா வீசிய அடுத்த பந்தை பை-லெக் திசையில் பலமாக தூக்கி அடித்தார்.

அந்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பி ரபாடாவுக்கு, விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார்.

இந்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …