Breaking News
Home / latest-update / ரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

ரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’காலா’ படம் ஜூன் மாதம் 7ஆம் திகதி வெளியாகிறது. இதில் ஹூமா குரேஸி, நானா படேகர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து ள்ளார். இந்தப் படத்தை அடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’2.ஓ’ படம் வெளியாகிறது.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தீவிரவாக நடந்து வருகின்றன. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப் பதிவு செய்துள்ளார்.

இதை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. செப்ரெம்பரில் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
அழுத்தமான வில்லன் வேடம் என்பதால் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை அவர் வெளிப்படுத்துவார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்வதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதுபற்றி விஜய் சேதுபதி, ’இது போன்ற வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் கிடைக்கும். படப்பிடிப்புத் தொடங்கும் தினத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு முழுவதும் ஒரு ரசிகனின் மனநிலையில் இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Check Also

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது. …