Breaking News
Home / latest-update / யாழ் மாநகர ஆணையாளராக கவிஞர் ஜெயசீலன் நியமிக்கப்பட்டார் (photos)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் மாநகர ஆணையாளராக கவிஞர் ஜெயசீலன் நியமிக்கப்பட்டார் (photos)

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமிக்கப்படுவதோடு தற்போதைய மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமிக்கப்படுவதோடு தற்போதைய மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக பட்டுள்ளார்.

. யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஜெயசீலன் கடந்த ஒக்டோபர் மாதம் மாகாண சபையின் கீழ் உள்ள நிர்வாகத்திற்கு மாற்றலாகியிருந்தபோதும் கடந்த இரு மாதங்களாக அவருக்குப் பொருத்தமான பணி வழங்கப்படாமலேயே இருந்த்து. இருப்பினும் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளராக ஜெயசீலன் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார்.  பிரபல கவிஞரான  த.ஜெயசீலன் யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவனாவார்.

இதேபோன்று தற்போது மாநகர சபையின் ஆணையாளராக பணியாற்றும் வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பணிக்கு நியமிக்கப்படுகின்றார்.

குறித்த பணி இடமாற்ற நியமனம் இன்று வழங்கப்படவுள்ளதோடு உடனடியாக பணிகளைப் பொறுப்பேற்குமாறும் கோரப்படுகின்றனர். இதேநேரம் கூட்டுறவு ஆணையாளர் பதவி மிக நீண்டகாலமாக வெற்றிடமாக கானப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …