Breaking News
Home / latest-update / யாழ் திருநெல்வேலி கோவில் நகைகளை மோசடி செய்த பொருளாளர் யாருக்கு அடித்தார்?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் திருநெல்வேலி கோவில் நகைகளை மோசடி செய்த பொருளாளர் யாருக்கு அடித்தார்?

திருநெல்வேலி பகுதியில் கோவில் சாத்துப்படியாரின் முறைகேடு தொடர்பாக முகநூலில் எதிர்ப்பு தெரிவித்த மாணவனும் அவனது தாயாரும் குறிப்பிட்ட கோவில் பொருளாளரினால் தாக்கப்பட்டுள்ளனர்.

பொருளாளரும் அவரது மச்சானும் இம்மாதம் 8 ம் திகதி இரவு வேளை குறிப்பிட்ட மாணவனின் வீட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து மாணவனை தலைக்கவசத்தால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலைத் தடுத்த மாணவனின் தாயாரும் பொருளாளரினால் கடுமையாக தாக்கப்பட்டார். இத்தாக்குதல் பற்றி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொருளாளர் திருகோணமலைக்கு தப்பி ஓடிவிட்டார். அவரின் மச்சான் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்.

பொருளாளரும் தாக்கப்பட்டவர்களும் உறவினர்களாகையால் ஏனைய உறவினர்களின் வேண்டுகோளின் நிமித்தம் இவ்வழக்கு பெரிது படுத்தப்படாமல் மன்னிப்பு வழங்கப்பட்டது.

சாத்துப்படியார் தற்போதைய நிர்வாகத்தில் உபசெயலாளராவார். சாத்துப்படியார் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் தனக்கும் பிரச்சனை வரும் என்ற காரணத்தால் பொருளாளர் அவசர அவசரமாக நகைகளை மீட்டுள்ளார்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …