Breaking News
Home / latest-update / யாழ் கல்­லுண்­டாய் பகுதி திடீர் திடீ­ரென பற்றி எரி­கி­றது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் கல்­லுண்­டாய் பகுதி திடீர் திடீ­ரென பற்றி எரி­கி­றது

யாழ்ப்­பா­ணத்­தின் கழி­வு­க­ளைக் கொட்­டும் இட­மான கல்­லுண்­டாய் குப்பை மேடு திடீர் திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரி­கி­றது. கடந்த ஒரு மாதத்­துக்கு மேலாக நடக்­கும் இந்த நிகழ்­வால் அந்­தப் பகுதி மக்­க­ளும் அதன் வழியே பய­ணம் செய்­ப­வர்­க­ளும் அச்­ச­ம­டைந்­துள்­ள­னர்.

இர­வில் பய­ணிப்­போர் மேலும் கலங்­கிப் போகின்­ற­னர். குப்­பை­கள் மற்­றும் கழி­வு­க­ளால் ஏற்­ப­டும் அள­வுக்­க­தி­க­மான மீதேன் வாயுவே தீ எரி­வ­தற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கி­றது.

‘‘அதி­க­ரித்த வெப்­பம் காரண­மாக குப்­பை­க­ளி­லி­ருந்து வெளி­யே­றும் உயிர் வாயு­வால் தீ மூழ்­கி­றது’’ என்று யாழ். மாந­க­ரச சபை ஆணை­யா­ளர் பொ.வாகீ­சன் தெரி­வித்­தார்.யாழ். மாந­கர சபையே கல்­லுண்­டா­யில் குப்­பை­க­ளைக் கொட்டி வரு­கின்­றது.

கடந்த ஏப்­ர­லில் மீதெட்ட முல்­ல­வில் குப்­பை­மேடு சரிந்து 26 பேர் உயி­ரி­ழந்­த­னர். அந்­தக் குப்பை மேட்­டில் மீதேன் வாயு அதி­க­ரித்து, அது இடை­யில் தீப்­பற்றி எரிந்­த­தா­லேயே சரிந்து விழுந்து பேரி­டர் ஏற்­பட்­டது என்று ஆய்­வு­கள் பின்­னர் தெரி­வித்­தன.

கல்­லுண்­டாய் வெளிக்கு அண்­மை­யில் குடி­யி­ருப்­புக்­கள் இல்­லா­வி­டி­னும் அந்­தப் பகு­தி­யால் தின­மும் பல நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­கள் பய­ணிக்­கின்­ற­னர்.

மீதெட்­ட­முல்ல பேரி­ட­ரின் பின்­னர் அங்கு ஆய்வு மேற்­கொண்ட ஜப்­பான் வல்­லு­நர்­கள், குப்பை மேட்­டுப் பகு­தி­யில் அள­வுக்­க­தி­க­மான மீதேன் வாயு காணப்­ப­டு­வ­தா­க­வும் அது ஆபத்­தா­னது என்­றும் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

மெதேன் வாயு­வின் அள­வா­னது சாத­ர­ண­மா­கக் காற்­றில் 0.5 வீதம் காணப்­ப­டும். அது 1.5வீதம் வரை சரா­ச­ரி­யாக அதி­க­ரிக்­கும்.

எனி­னும் மீதெட்­ட­முல்ல குப்பை மேட்­டில் மீதேன் வாயு­வின் அள­வா­னது 16 வீத­மாக இருந்­தது. மல­ச­லக் கழி­வு­க­ளும் குப்பை மேட்­டில் கொட்­டப்­ப­டு­வதே மீதேன் வாயு­வின் அள­வுக்­க­தி­க­மான அதி­க­ரிப்­புக்­குக் கார­ணம் என்­றும் ஜப்­பான் வல்­லு­நர்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

யாழ்ப்­பாண மாந­கர சபை மற்­றும் தனி­யார் நிறு­வ­னங்­க­ளால் யாழ்ப்­பாண மாந­க­ரி­லுள்ள குடி­யி­ருப்­புக்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க­ளில் அகற்­றப்­ப­டும் மல­ச­ல­கூ­டக் கழி­வு­க­ளும் கல்­லுண்­டாய் குப்பை மேட்­டுப் பகு­தி­யி­லேயே கொண்­டப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை, யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வக் கழி­வு­க­ளும் கல்­லுண்­டா­யில் கொண்­டப்­பட்டு எரிக்­கப்­ப­டு­கின்­றன என்ற குற்­றச்­சாட்டை பணிப்­பா­ளர் மருத்­து­வர் த.சத்­தி­ய­மூர்த்தி மறுத்­தார்.

‘‘போதனா மருத்­து­வ­ம­னைக் கழி­வு­கள் கல்­லுண்­டாய் வெளி­யில் கொழுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­வ­தில் எந்­த­வி­த­மான உண்­மை­யும் கிடை­யாது.

போதனா மருத்­து­வ­ம­னை­யில் தின­மும் சேத­னக் கழி­வு­கள் 500 கிலோ தொடக்­கம் 600 கிலோ வரை­யில் சேர்­கின்­றன. அதனை நாம் தெல்­லிப்­ப­ளை­யில் உள்ள புகை போக்கி மூலமே எரித்து அகற்­று­கின்­றோம்.

இதே­போன்று தின­மும் உண­வுக் கழி­வு­கள் இரண்டு உழவு இயந்­தி­ரம் சேர்­கின்­றன. அவை­யும் மாந­கர சபை­யி­ன­ருக்கு பணம் செலுத்தி அகற்­றப்­ப­டு­கின்­றன.

அதே­போன்று சத்­தி­ரச் சிகிச்சை மூலம் அகற்­றப்­ப­டும் மனித உடற்­பா­கங்­கள் மற்­றும் இறந்த சிசுக்­கள் என்­பன வாரம் ஒரு­முறை மாந­கர சபை மூலம் அகற்­றப்­பட்­டுக் கோம்­ப­யன் மயா­னத்­தில் எரிக்­கப்­ப­டு­கின்­றன.

அதற்­கும் மாந­கர சபைக்கு பணம் செலுத்­தப்­ப­டு­கி­றது. இதுவே எமது கழி­வ­கற்­றல் முற­மை­யா­கும்’’ என்று மருத்­து­வர் த.சத்­தி­ய­மூர்த்தி மேலும் தெரி­வித்­தார்.

குப்பை தொடர்ந்து இரவு பக­லாக எரி­வ­தால் எழும் புகை நவாலி வரை பரவி குடி­யி­ருப்­பு­க­ளைப் பாதிக்­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …