Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணத்தில் ஆயிரம் ரூபாவிற்கு குழந்தை விற்பனை!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்ப்பாணத்தில் ஆயிரம் ரூபாவிற்கு குழந்தை விற்பனை!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த தாயும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு பெண்ணும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்றைய தினம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ். பெண்ணொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயும், குழந்தையை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண்ணும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், தாயால் விற்பனை செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த குழந்தையை மீட்டுள்ளோம். குழந்தையை யாழ். பெண்ணொருவருக்கு ஆயிரம் ரூபாவிற்கே தாய் விற்றுள்ள நிலையில், யாழில் அந்த குழந்தையை வாங்கியவர் ஒரு இலட்சம் ரூபாவிற்கு குழந்தையை விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற…

User Rating: Be the first one !

பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த தாயும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு பெண்ணும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்றைய தினம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ். பெண்ணொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயும், குழந்தையை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண்ணும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், தாயால் விற்பனை செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த குழந்தையை மீட்டுள்ளோம்.



குழந்தையை யாழ். பெண்ணொருவருக்கு ஆயிரம் ரூபாவிற்கே தாய் விற்றுள்ள நிலையில், யாழில் அந்த குழந்தையை வாங்கியவர் ஒரு இலட்சம் ரூபாவிற்கு குழந்தையை விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தின அறிவுறுத்தலுக்கு அமைவாக குழந்தை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …