Breaking News
Home / latest-update / யாழில் 50 ரூபாவுக்கு முடி வெட்டுமாறு சலுான்காரரை கேட்டு சண்டை பிடித்தவருக்கு நடந்த கதி!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் 50 ரூபாவுக்கு முடி வெட்டுமாறு சலுான்காரரை கேட்டு சண்டை பிடித்தவருக்கு நடந்த கதி!!

துன்னாலை குசவப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த இளஞனை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க பருத்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமி நேற்றுமுன்தினம் (14) உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இளஞன் குசவப்பிட்டி பகுதியில் உள்ள சலூனுக்கு சென்றவர் 50 ரூபாவினை கொடுத்து முடிவெட்டுமாறு கேட்டு தகராறயில் ஈடுபட்டிருந்தார். இதற்கு கடை உரிமையாளர் தலைமுடிவெட்டுவதற்கு சங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே வெட்டமுடியும் என கூறியுள்ளார்.

இதன் போது ஆத்தரமடைந்த இளஞன் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதம் விளைவித்திருந்தார். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து இளஞன் நேற்றுமுன்தினம் (13) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …