Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / யாழில் 194 புள்ளிகளை பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்
https://www.facebook.com/esoftjaffna/

யாழில் 194 புள்ளிகளை பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்

யாழில் 194 புள்ளிகளை பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

 

அதே பாடசாலையை சேர்ந்த மைத்திரி அனுருத்திரன் 193 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட வெட்டுப்புள்ளி 155ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் 216 மாணவர்கள் தேற்றியதில் அவர்களில் 120 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

யாழில் 194 புள்ளிகளை பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்

யாழ் மாவட்டத்தில் புலமை பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவி ஊடகங்களுக்கு கருத்கு வெளியிட்ட போது தான் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்று கல்விகற்கவில்லை எனவும், பாடசாலை கல்வியை பயின்றே பரீட்சையில் சித்தியெய்தியதாகவும் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாடசாலையில் கற்கும் பாடங்களை வீட்டில் மீண்டு படிப்பதன் மூலம் நல்ல பெறுபேற்றினை பெறமுடியும் எனவும் குறித்த மாணவி தெரிவித்தார்.

 

இதேவேளை மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தினை பெற்றமாணவி கருத்து தெரிவிக்கையில் தான் இந்த பெறுறேற்றினை பெற்றுக்கொள்வதற்கு தனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் வழங்கிய ஊக்கமே காரணம் என குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராகி வட மாகாண தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே தனதும், தனது பெற்றோரின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

Check Also

ஒவ்வொரு ராசிகாரர்களிடமும் காணப்படும் ஈர்க்கும் குணம் என்னவென்று தெரியுமா…? உங்கள் ராசிக்கு என்ன குணம்

ஒவ்வொரு ராசிக்கும் பொது பலன் என்று ஒன்றிருப்பதை போல ஒவ்வொரு ராசியிடமும் காணப்படும் ஈர்ப்புடைய விஷயம் எது என்பது பற்றி …

Leave a Reply

Your email address will not be published.