Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / யாழில் வாள்வெட்டுக் குழுக்களை அடக்க புதிய குழு – காவல்துறை!
https://www.facebook.com/esoftjaffna/

யாழில் வாள்வெட்டுக் குழுக்களை அடக்க புதிய குழு – காவல்துறை!

யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும்நோக்கில் தனிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழு நேற்றிலிருந்து தனது பணியை ஆரம்பித்துள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையின்

யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியானகுற்றச் செயல்கள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பத்திற்கும்மேற்பட்ட காவல்துறையினர் ஒன்றிணைக்கப்பட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், முகமூடிக் கொள்ளைகள், அடாவடிகளில் ஈடுபடுவோர்களைத் தேடிக் கண்டறியும் எனத் தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில், இக்குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், இக்குழுக்களின் அட்டகாசம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் சென்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி

சோமாலியா நாட்டின் மொகடிசு நகரில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான …

Leave a Reply

Your email address will not be published.