Thursday , February 22 2018
Breaking News
Home / latest-update / யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு கடூழிய சிறை
https://www.facebook.com/esoftjaffna/

யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு கடூழிய சிறை

வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று (2.11.17) ஒரு மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் விற்பனை முகாமையாளராக கடமையாற்றும் இளைஞன் ஒருவனுக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மதுபோதையில் தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்த வாளை எடுத்து அட்டகாசம் புரிந்தவேளை அவரது தந்தையாரால் இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து அவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேளை நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரனால் இத்தண்டனை வழங்கப்பட்டது.

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.