Breaking News
Home / latest-update / யாழில் மாணவர்கள் அறுவரை பலியெடுத்த படகு விபத்து! சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

யாழில் மாணவர்கள் அறுவரை பலியெடுத்த படகு விபத்து! சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மாணவர்களின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 6 பேரினது சடலங்களும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றது. மண்டைதீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்தில் உயர்தர மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்த மாணவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்.பண்ணை குருசடி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …