Breaking News
Home / latest-update / யாழில் மருமகனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மாமனாருக்கு கடூழிய சிறை!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

யாழில் மருமகனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மாமனாருக்கு கடூழிய சிறை!!

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2 ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் சரத்பாபு என்பவரை அவரது மனைவியின் தந்தையும் மற்றும் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்படும் போது நீதிபதி சில விடயங்களை சுட்டிக்காட்டி கொலை குற்றச்சாட்டில் இருந்து கைமோசக் கொலை குற்றத்திற்கு மாற்றியிருந்தார்.

அதாவது சம்ப தினத்தன்று தனது மகளை மருமகன் அடித்து சித்திரவதை செய்வதாக தொலைபேசி வாயிலாக தகவல் கிடைத்தையடுத்தே தாம் அங்கு சென்று மகளை காப்பாற்ற முற்பட்ட போது மாமானாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே மருமகன் கத்திக்குத்துக்கு இலக்காயுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சகோதரன் தலைக்கவசத்தால் அடித்ததாகவும் பிரதிவாதிகள் தரப்பால் சாட்சியின் போது குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை மன்றின் கவனத்திற்கு எடுத்து சாட்சியங்களூடாக பரிசிலித்து இந்த கொலை குற்றச்சாட்டை கைமோசக்கொலை குற்றச்சாட்டுக்கு மாற்றியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதன்படி, கைமோசக் கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக மாமானார் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு ஏழாண்டு கடூழிய சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதப் பணமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சகோதரன் ஒருவருக்கு 2 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும் அது ஜந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும் மற்றைய சசோதரனை விடுவித்தும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …