Breaking News
Home / latest-update / யாழில் பள்ளிக்கூடத்துக்கு பிந்திப் போகும் ஆசிரியர்களின் திருவிளையாடலால் பரபரப்பு!!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் பள்ளிக்கூடத்துக்கு பிந்திப் போகும் ஆசிரியர்களின் திருவிளையாடலால் பரபரப்பு!!!

பாட­சா­லை­க­ளில் கைய­டை­யாள இயந்­தி­ரத்துக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணப் பகு­தி­யில் துண்­டுப் பிர­சுரங் கள் நேற்று விநி­யோ­கிக்கப்­பட்­ட­ன என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த ஆண்டு முதல் வன்­னிப் பாட­சா­லை­கள் சில தவிர வடக்கு மாகா­ணத்­தின் பல பகு­தி­யி­லுள்ள பாட­சா­லை­க­ளில் கைய­டை­யாள இயந்­தி­ரம் நடை­மு­றைக்கு வரு­கின்­றது.

இதனை நிறுத்­தச் சொல்­லியே துண்­டுப் பிர­சு­ரங்­கள் விநி­ யோ­கிக்­கப்­பட்­டன. இந்த துண்­டுப் பிர­சு­ரத்­தில் குறிப்­பி­டப்­பட்­ட­தா­வது:

‘மீள முடி­யாத பாதை­யில் வடக்கு மாகா­ணம், எங்­கள் பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லம் எங்­கள் கைக­ளில்,ஆசி­ ரி­யர்­களே ஒன்­று­ப­டுங்­கள், வடக்கு மாகா­ணம் கல்­வி­யில் 9வது இடத்­தில் இருப்­ப­தற்கு யார் கார­ணம் மீண்­டும் மீண்­டும் பின்­தங்கி வைப்­ப­தற்கு கைய­டை­யாள இயந்­தி­ரம். கைய­டை­யாள இயந்­தி­ரத்­தி­னால் ஆசி­ரி­யர்­க­ளுக்கு தேவை­யற்ற லீவு, மன உளைச்­சல் ஏற்­ப­டு­கின்­றது. கைய­டை­யாள இயந்­தி­ரத்­திற்கு வேலை செய்­தால் போதும் என அதி­கா­ரி­கள் நினைக்­கின்­ற­னர். எனவே அடுத்த ஆண்­டில் தமிழ், ஆங்­கில, சமூக விஞ்­ஞான அழ­கி­யல் போட்­டி­கள் போன்ற மேல­திக செயற்­பா­டு­களை நிறுத்­து­வோம்’ என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தத் துண்­டுப் பிர­சு­ரங்­கள் வெளி மாவட்­டத்துக்கு பணி­பு­ரி­யும் அரச உத்­தி­யோ­கஸ்­தர் பேருந்துகளி­லும், வலி­கா­மம், மானிப்­பாய் பகுதி, நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி வீதி மற்­றும் தென்­ம­ராட்சிப் பகு­தி­யி­லும் வழங்­கப்­பட்­டுள்­ள­து என தெரி­ய­ வந்­துள்­ளது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …