Breaking News
Home / latest-update / யாழில் திருடிவிட்டு தப்பிச் சென்ற இனந்தெரியாத நபருக்கு வந்த சோதனை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

யாழில் திருடிவிட்டு தப்பிச் சென்ற இனந்தெரியாத நபருக்கு வந்த சோதனை

யாழ். கந்தர்மடத்தில் இனம் தெரியாத நபரொருவர் நூதன முறையில் மேற்கொண்ட திருட்டுச் சம்பவங்கள் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாத நபர் அடுத்தடுத்த வீடுகளில் பணம், எரிவாயு சிலிண்டர், கைத்தொலைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுள்ளார்.

அந்த நபர் வீடுகளில் திருடிய பின்பு தப்பிச் சென்ற போதும், இரு வீடுகளிலும் மறைத்துப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இருப்பினும் அந்த நபரின் உருவம், அவர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி போன்றன கண்காணிப்பு கமராக்களில் மிகத் தெளிவாகத் பதிவாகியுள்ளன.

எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு யாழ். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …