Breaking News
Home / latest-update / யாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி! பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி! பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இ.போ.ச பேருந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பேருந்தினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது 1 கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவுடன் கவனிப்பாரற்று கிடந்த மர்ம பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் இ.போ.ச (வாழைச்சேனை) சாரதியினை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பொதி தனது இல்லை என சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் குறித்த பொதியினுள் பென்ரைவ் (PENDRIVE) காணப்பட்டுள்ளது. அதனை கணினியில பரிசோதித்த போது குறித்த பென்ரைவ் (PENDRIVE) இல் சாரதியின் குடும்பத்தினரின் புகைப்படம் காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …