Breaking News
Home / latest-update / யாழில் இயங்கும் தொலைக்காட்சியான டான் ரீவி கேபிள்கள் அறுத்தெறியப்படுகின்றன!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் இயங்கும் தொலைக்காட்சியான டான் ரீவி கேபிள்கள் அறுத்தெறியப்படுகின்றன!!

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேபிள் இணைப்பு வயர்கள் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணத்தில் கேபிள் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாம்ம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

CAX 9991 என்ற இலக்கமுடைய கறுப்பு நிற காரில் வந்தவர்களாலேயே இந்த நாசகார வேலை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் கேபிள் இணைப்புக்களை வழங்கிவருபவர்கள் வரும் 31ஆம் திகதிக்குள் தமது சேவையை நிறுத்தவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு அறிவித்தது.
இந்த நிலையிலேயே சட்டபூர்வமாக இயங்கும் தமது நிறுவனத்தின் கேபிள்கள் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன என டான் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …