Breaking News
Home / latest-update / மொபைல் தரம் உயர உதவும் கூகுள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மொபைல் தரம் உயர உதவும் கூகுள்

இண்டர்நெட் பயன்படுத்துபவர்களின் அதிகம் பேர் முதலில் செல்லும் தளம் கூகுள் தான். கூகுளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. இந்நிலையில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் தற்பொழுது மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு என நடைமுறைத் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் 2018ம் ஆண்டுக்கான டெவலப்பர் மாநாட்டை கலிஃபோர்னியாவின் மலையர் வியூவில் உள்ள ஷோர்லினின் ஆம்பிதியேட்டரில் மே மாதம் 8ந்தேதி நடத்தியது.  இந்த ஆண்டுக்கான மாநாட்டுக கருப்பொருளின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?  ஆண்டராய்டு, ஐ போன் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் டெவலப்பர்ஸ் மாநாடு இதில் பல புதிய கருத்துகளை கூகுள் அறிமுகப்படுத்தியது.

கூகுள் மேப்ஸ்
புதிய இடத்திற்கு அல்லது வெளி ஊர்களுக்குச் செல்லும் போது வழி தெரியாமல் தவித்து கொண்டிருக்கும்பொழுது நமக்கு சாமர்த்தியமாக உதவும் செயலியாக கூகுள் மேப்ஸ் இருக்கின்றது. இந்த ஆப் இண்டர்நெட் மற்றும் தான் சேகரித்த தகவல்களின் தொகுப்புகளைப் பயன்படுத்தி நமக்கு உதவுகின்றது. கூகுள் மேப்ஸ் செயலியில் மேலும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூகுள் மேப்ஸ் செயலியை இதுவரை இல்லாத அளவிற்கு மிகச் சுலபமாக இயக்க கூகுள் வழி செய்துள்ளது.

கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் டேப் மாற்றியமைக்கப்பட்டு, அருகாமையில் இருக்கும் புதிய, வித்தியாசமான அடையாளமாக பயனபடும் இடங்களை அறிந்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். இனி மேப்ஸ் ஆப்ஸை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளை தேடும் போது அங்கு இருக்கும் பிரபல உணவகங்கள், அன்ற் அல்லது அப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க முடியும்.

மேலும்  டிரென்டிங் லிஸ்ட்கள் மற்றும் நீங்கள் உணவு பிரியர் (Foodie) என்றால், நீங்கள் அதிகம் செல்லும் பகுதிகளை பட்டியலிட்டு காண்பிக்கும், மேலும் உள்ளூர் வாசிகள் வழங்கும் தகவல்கள், கூகுள் அல்காரிதம் மற்றும் நம்பத்தகுந்த பதிப்பகங்கள் வழங்கும் தகவல்களைக் கொண்டு புதிய உணவகங்களை அறிந்து கொள்ள முடியும்.

கூகுள் மேப்ஸ் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் மற்றொரு புதிய அம்சமாக யுவர் மேட்ச் (Your Match) இருக்கிறது. இந்த அம்சம் நீங்கள் புறப்படும் இடத்தில் எந்தளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் இதற்கான காரணங்களையும் குறிப்பிட்ட உணவு அல்லது பானங்களை டேப் செய்ததும் கிடைக்க வாய்ப்பு இருப்பதையும் தெளிவுபடுத்தும். மெஷின் லேர்னிங் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே கூகுள் இந்தத் தகவல்களை வழங்குகிறது.

இதற்கு அடிப்படையாக நீங்கள் தேர்வு செய்திருக்கும் விருப்பங்களையும், நீங்கள் செல்லும் பகுதிகள் மற்றும் பல்வேறு இதர தகவல்கள் பயன்படுத்தப்படும்.
இந்த பட்டியல் நீங்கள் விரும்பும் மாற்றங்களுக்கு ஏற்ப தானாக தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் ஒரு குழுவாக வெளியே செல்லும் போது முன்கூட்டியே சிறு விவரங்களைக் கூட திட்டமிடுவது பயனுள்ளதாக அமையும். இந்தத் தேவைகள் அல்லது வசதி விவரங்கள் கிடைக்கும் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஒருவர் தயாரிக்கும் விவரங்களை மற்றவர்களுக்கு அனுப்பி அவர்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்யவும் மாற்றம் செய்யவும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் அதிகம் பேர் விரும்பும் பகுதிகளை அறிந்து கொண்டு விரைவில் செல்ல வேண்டிய இடத்தை முடிவு செய்ய முடியும்.நீங்கள் புறப்பட வேண்டிய இடத்தை தேர்வு செய்ததும், அங்கு முன்பதிவு செய்ய வேண்டிய வேலையை கூகுள் உங்களுக்காக செய்து முடிக்கும். ஃபார் யு (For You) என்ற அம்சம் உங்களது பகுதியின் அருகாமையில் நடக்கும் புதிய தகவல்களை உடனுக்குடன் உங்களுக்கு வழங்கும், இதை கொண்டு அருகாமையில் உள்ள தலைசிறந்த இடங்களுக்கு சென்று வர முடியும்.

கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குகூள் அசிஸ்டன்ட்

இந்த மாநாட்டில் சுந்தர் பிச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூகுள் அசிஸ்டென்ட் ஆப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இந்த ஆப்ஸ் செயல்படும் முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை டூப்லெக்ஸ் என்ற வசதியை அறிமுகம் செய்து பேசினார்.

இது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள். இந்த மென்பொருள்  மருத்துவமனை, முடி திருத்தும் நிலையம் போன்ற இடங்களுக்கு உங்கள் சார்பில் அழைப்புகளை மேற்கொண்டு முன்பதிவுகளை உறுதி செய்யும் வசதியை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த அம்சம் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போன்றே பதில் அளிக்கிறது.

கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும்.

அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது.

முன்பதிவுகளுக்கு நீங்கள் பேச வேண்டிய இடத்தில் உங்களுக்கு பதில் உங்களின் குரலாக செயற்கை நுண்ணறிவு இயங்குகிறது. மறுமுனையில் பேசுவோர் டூப்லெக்ஸ் தானாக அறிவிக்கும் வரை மனிதர்கள் தான் பேசுகின்றனர் என்று எண்ணும் வகையில் மிக இது வேலை செய்கிறது.

அந்த அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப இந்த மென்பொருள் பதில் அளிக்கும். பதில் கேள்விகளையும் கேட்கும். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் அம்சம் வழங்கப்படும் போது, அழைப்பை மேற்கொள்வது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் என்பதை டூப்லெக்ஸ் முதலில் தெரியப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் இயந்திரம் தான் பேசுகிறது என்பதை தெரியப்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டு, அனைவரும் மிக எளிமையாக இதனை அறிந்து கொள்ளும் வகையில் இது இருக்கும். கூகுளின் 8ந்தேதி மாநாட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது இது முதற்கட்ட டெமோ தான், பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் போது டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் முறையான பதில் வழங்கும் அம்சங்கள் சேர்க்கப்படும், என கூகுள் செய்தி தொடர்பாளர் பின்னர் தெரிவித்திருக்கிறார்.

இயந்திரங்கள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் அறிமுகமாகிவிட்ட நிலையில், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வரும் அப்டேட்களில் மனித குரலில் இருந்து இயந்திர குரல் முற்றிலும் வித்தியாசப்படுத்தப்படும் என்றும் டூப்லெக்ஸ் சிஸ்டம் மூலம் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் கூகுள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட டூப்லெக்ஸ் அம்சம் துவக்க நிலையில் தான் இருக்கிறது. பெருமளவு அம்சங்கள் சேர்க்கப்பட்டு, முதற்கட்டமாக டெவலப்பர்களுக்கு வழங்கப்படும். அதன் பின் தான் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் வழங்கப்படும் என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இது சந்தோஷத்தை சற்று மட்டுப்படுத்திவிட்டது எனலாம்.

Check Also

தென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

தென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …