Thursday , April 26 2018
Breaking News
Home / latest-update / மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ‘விஸ்வரூபம்-2’ படம் உருவானது.



இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன.
இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இயக்கி இருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடந்தன. இதற்கிடையே கமல் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்களை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.



ரஜினி நடித்த ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. எனவே அந்த படத்துக்கு பிறகு விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அனேகமாக மே அல்லது ஜூன் மாதத்தில் விஸ்வரூபம்-2 படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘விஸ்வரூபம்-2’ படத்துக்கு பிறகு ‌ஷங்கர் டைரக்‌ஷனில் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்க கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன.



அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கமல் ‘இந்தியன்-2’ படத்துக்கு நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுக்கிறார். முழுக்க, முழுக்க அரசியல் பணிகளுக்கிடையே ‘இந்தியன்-2’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Check Also

இரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்!

ஜினிகாந்த் அடுத்த படம் அறிவிப்பு!- அப்போ அரசியல் பயணம்?- வீடியோ பத்து ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய …