Thursday , February 22 2018
Breaking News
Home / latest-update / மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை
https://www.facebook.com/esoftjaffna/

மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இதில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைகோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் ‘மெர்சல்’ திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இணையதள சேவை வழங்கும் பல நிறுவனங்களுக்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெர்சல் திரைப்படம் 3,292-க்கும் அதிகமான திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி வெளியாக உள்ளது.

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.