Saturday , February 24 2018
Home / latest-update / முல்லைத்தீவில் குளம் உடைந்து நீர் முழுவதும் வெளியேற்றம்!
https://www.facebook.com/esoftjaffna/

முல்லைத்தீவில் குளம் உடைந்து நீர் முழுவதும் வெளியேற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மன்னாகண்டல் குளம் நேற்று அதிகாலை உடைந்து நீர் முழுவதும் வெளியேறியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த குளம் கடந்த 2014 ஆம் ஆண்டு 1.9 மில்லியன் ரூபா பெறுமதியில்
ஆழப்படுத்தப்பட்டதோடு 2015 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சத்து தொண்ணூற்றெட்டாயிரத்து
தொள்ளாயிரத்து இருபத்தெட்டு ரூபா ஐம்பத்தியேழு சதம் (1898928.57) பெறுமதியில்
துருசுப் பகுதியிலிருந்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை வேளையில் துருசு பகுதியில் குளம் உடைப்பெடுத்து சுமார்
பத்து அடிக்கும்  நீளமான அணைக்கட்டு உடைந்து சென்றுள்ளது. குறித்த குளத்தில் இரண்டு தடவை
அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை சரிவரச் செய்யப்படவில்லை என்ற
குற்றச்சாட்டு மக்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த துருசின் கீழ்பகுதியில் பழமையான கொட்டு ஒன்றே
காணப்பட்டிருப்பதாகவும் அந்தப் பகுதியின் புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை
என்றும் இதனாலேயே அது உடைப்பெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச கமக்கார அமைப்பின் தலைவர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த இரண்டு மூன்று வருடமாக வரட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குளத்தில் அண்மைய நாட்களாக நீர் நிறைந்து வருவதைப் பார்த்துச்
சந்தோசமடைந்தோம். ஆனாலும் நேற்று அதிகாலை இந்தக் குளம் உடைப்பெடுத்து குளத்து நீர்
வெளியேறியுள்ளது. அதனை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். அத்துடன் அதனை
உடனடியாகச் சீர் செய்யும் சாத்தியக்கூறு காணப்படுகிறது. எனவே விரைவாகப் புனரமைத்தால்
இனிவரும் நீரையாவது தேக்கி எமது குளத்தின் கீழுள்ள நூறு ஏக்கர் வரையான வயல் நிலங்களைக்
காப்பாற்ற வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.

Check Also

சருமத்தை ஜொலிக்க வைக்கும் பாதாம் எண்ணெய்

இயற்கை பொருளான பாதாம் எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்தை ஜொலிப்புடன் மிருதுவாக்குவது விரிவாக தெரிந்து கொள்ளலாம். பாதாம் எண்ணெயில் நிறைய …

Leave a Reply

Your email address will not be published.