Home / latest-update / மும்பையில் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்த விமானம் – பைலட்டுகள் உள்பட 5 பேர் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மும்பையில் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்த விமானம் – பைலட்டுகள் உள்பட 5 பேர் பலி

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே திடீரென சிறிய ரக விமானம் இன்று பிற்பகலில் நொறுங்கி விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள், 2 எஞ்சினீயர்கள் மற்றும் தரையில் இருந்த நபர் உள்ளிட்ட 5 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் …