Breaking News
Home / latest-update / முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல்

முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி – 4,
முட்டை – 4,
சிக்கன் (எலும்பு இல்லாதது) – 300 கிராம்,
பெரிய வெங்காயம் – 2,
மிளகுதூள் – கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – சுவைக்கேற்ப.

அரைக்க :

மிளகு – கால் டீஸ்பூன்,
சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) – கால் டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 3 பல்,
பட்டை – 1.

செய்முறை :

சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள் போட்டு நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு, கொத்தமல்லி போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள்.

முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள்.

தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும். வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.

சூப்பரான முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல் ரெடி.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …