Saturday , February 24 2018
Home / latest-update / முகம் பொலிவு பெற..
https://www.facebook.com/esoftjaffna/

முகம் பொலிவு பெற..

சிலருக்கு சருமமானது மென்மையிழந்து பொலிவின்றி காணப்படும். சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும். இங்கு பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாமந்தி பூஃபேஸ் பேக்:

சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 ,15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மையினால், சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வாரம் இருமுறை போட்டு வந்தால், நல்ல பலன் காணலாம்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்:

4 டேபிள் ஸ்பூன் கடலை மாவில், 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, அதனை பச்சை பால் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பொலிவான சருமத்தைப் பெறலாம்.

சந்தன மாஸ்க்:

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் மறைந்து, பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்:

1 டேபிள் ஸ்பூன் தேனில் 35 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களில் படாதவாறு முகத்தில் தடவி 10 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தவறாமல் செய்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

ஹெர்பல் பேக்:

சிறிது கடலை மாவுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள், சில துளிகள் எலுமிச்சை சாறு, அத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமைகள் நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்

Check Also

ஒரு ஆணின் வாழ்க்கையில் இந்த ஏழு தருணங்களில் பெண் இருக்கிறாள்

நீரின்றி அமையாது உலகு என்பதை போல ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் …

Leave a Reply

Your email address will not be published.