Breaking News
Home / latest-update / மீற்றர் வட்டிக்கு கடன் வழங்கும் பாவத்திலிருந்து விடுதலை பெறுக!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மீற்றர் வட்டிக்கு கடன் வழங்கும் பாவத்திலிருந்து விடுதலை பெறுக!

அறத்தின் வழியில் பொருளீட்டம் செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த விரதமாகப் பூண்டவர்கள் நம் தமிழர்கள்.

அறம் தவறி, பாவத்தின் வழியில் பொருளீட் டம் செய்தால், அது நின்று நிலைக்காது என் றும் அவ்வாறு பொருளீட்டம் செய்வது பாவ காரியம் என்றும் நம் தமிழினம் வகுத்துள்ளது.

பாவம், புண்ணியம் என்ற கருத்துக்களு டனும் ஊழ்வினைப் பயன், கன்ம வினைக் கோட்பாடு என்ற நியாய எல்லைகளுடனும் வாழ்ந்த தமிழ் இனத்தில் இன்று ஏகப்பட்ட அதர்ம காரியங்கள் நடந்தேறுவதைப் பார்க் கும்போது இதயம் கனத்துக் கொள்கிறது.
எப்படியும் வாழலாம் என்ற நிலைமை ஏற் பட்டுவிடுகின்றபோது, பாவகாரியங்கள் மலி யத் தொடங்கி விடுகின்றன.

இன்று எங்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை, களவு, ஆலயங்களில் தெய்வ விக் கிரகங்களைத் திருடுதல், கூலிக்கு வாள்வெட்டு நடத்துதல் எனப் பெரும் வக்கிரச் செயல்கள் நடந்த வண்ணமுள்ளன.

இதில், மீற்றர் வட்டிக்கு கடன் கொடுக்கின்ற அநியாயம் கொலைப் பாவத்துக்கு ஒப்பானதாக உள்ளது.

என்னிடம் இருக்கின்ற பணத்தைக் கொடு த்து அதற்கு அதிக வட்டி வாங்குவதில் என்ன தவறு உண்டென்று கடன் வழங்குவோர் கேட்க லாம்.
இங்குதான் அறத்தின் வழியில் பொருள் உழைத்தல் என்ற தத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் கோடி கோடியாக பணம் வைத்திருந்தாலும் அதனை அனுபவிப்பதற்கு இறைவனின் அருள் இருக்க வேண்டும்.
அவனின் கிருபை இல்லையயனின் கோடி வைத்திருந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்றாகிவிடும்.
இதனை
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
என வள்ளுவப் பெருமான் பேசுவார்.
இதனையே திருமுருக கிருபானந்தவாரியார் கூறுகிறார்;
மிகப்பெரிய சர்க்கரைத் தொழிற்சாலை வைத்திருக்கும் உரிமையாளர் சிறு துண்டு சர்க்கரையைக் கூட தன் வாயில் போட்டு சுவைக்க முடியாமல் உள்ளார். அந்தளவுக்கு அவருக்கு சர்க்கரை வியாதி உண்டு என்பார்.
எனவே பொருளீட்டம் தர்மத்தோடு இருந் தால் மட்டுமே, அந்தப் பொருளை நுகர முடியும்.

ஆக, மீற்றர் வட்டிக்கு கடன் வழங்குவோர் அந்தப் பாவத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு விலக்குப் பெறுவது மற்றவர் களையும் பாதுகாப்பதாக இருக்கும்.
தவிர, நிதி மூலதனம் நிறையவே உண்டு என்றிருப்போர் வட்டியூடாக வருமானம் உழைத் தல் என்ற கொள்கையை விடுத்து, உற்பத்தி முயற்சிகளில் முதலீடு செய்து பொருள் உற்பத்தி, வேலைவாய்ப்பு என்பதனூடாக தாமும் பிறரும் நன்மை பெற உதவ முடியும் என்பதால் இது பற்றியும் சிந்திப்பது நல்லது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …