Wednesday , February 21 2018
Breaking News
Home / latest-update / மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பினார் பிராண்டன் டெய்லர்
https://www.facebook.com/esoftjaffna/

மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பினார் பிராண்டன் டெய்லர்

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் டெய்லர். கவுண்டி போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இவர், மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியுள்ளார்.

மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பினார் பிராண்டன் டெய்லர்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் மெக்கல்லம். ஆஸ்திரேலியா – நியூசிலாந்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்குப் பிறகு, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றார்.

நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடிய டெய்லர் தற்போது இங்கிலாந்தில் இருந்து திரும்பி, மீண்டும் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். இதை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. 2017 சீசன் வரை அவரது ஒப்பந்தம் உள்ளது. இருந்தாலும் நாட்டிங்காம்ஷைர் அணியில் இருந்து ஜிம்பாப்வே திரும்ப விரும்பினார். அவரது விருப்பத்திற்கு அனுமதி கிடைத்ததால் சொந்த நாடு திரும்புகிறார்.

 

ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அக்டோபர் மாதத்தில் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரின்போது பிராண்டன் டெய்லர் களம் இறங்க வாய்ப்புள்ளது.

31 வயதாகும் பிராண்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்காக 23 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 25 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.