Breaking News
Home / latest-update / மிளகு மட்டன் மசாலா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மிளகு மட்டன் மசாலா

தேவையான பொருள்கள்:

மட்டன் – அரை கிலோ
வெங்காயம் – 4
மிளகு,சீரகத்தூள் – 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
கறி மசால் தூள் – 1 ஸ்பூன்
மல்லி இலை,உப்பு,எண்ணெய் – தேவையான அளவு
பட்டை,இலவங்கம் – சிறிதளவு



செய்முறை:

மட்டனை சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு வேக வைக்கவும். பச்சை மிளகாய் ,வெங்காயம் ,தக்காளியை நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்விட்டு பட்டை,இலவங்கம் போட்டு தாளித்து மிளகாய் ,வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் மிளகு,சீரகத்தூள் , கறி மசால் தூள் சேர்த்து வதக்கி தக்காளி போட்டு வதக்கி வேக வைத்த கறியும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கிளரி மசாலா வாசனை போனவுடன் மசாலா கெட்டியானவுடன் மல்லி இலை தூவி இறக்கவும். காரத்திற்கேற்ப மிளகு தூள் சேர்த்து கொள்ளவும்.


Check Also

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி!!

சற்று நேரத்தின் முன் யாழ் நவீன சந்தைக் கட்டடங்களை இணைக்கும் பாலத்தின் அடியில் பாரவூர்தி ஒன்று சிக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த …