Home / latest-update / மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கான சில குறிப்புகள்.
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கான சில குறிப்புகள்.

மாதவிடாய் என்பது பெண்கள் வாங்கி வந்த வரமா சாபமா என்று தெரியவில்லை ஆனால்  பெண்ணுடனே பிறந்தது எனலாம். ஒரு பெண் பூப்பெய்த நாட்களிலிருந்து அவளின் ஒரு குறிப்பிட்ட வயது வரை அவள் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் இந்த மாதவிடாய் சுழற்சி.

கிட்டத்தட்ட 14-50 வயது வரை இந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. கர்ப்பபையின் உள்ளடுக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள இரத்தம் கருவுறவில்லை என்றால் மாதந்தேறும் மாதவிடாய் என்ற பெயரில் இரத்த போக்காக வெளியேறுகிறது.

இந்த மாதவிடாயை சில நேரங்களில் அதாவது பயணம் செய்யும் போதா அல்லது வெளியூருக்கு செல்லும் போதோ தள்ளிப் போட வேண்டிய சூழ்நிலை நிலவும். அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட இயற்கை முறைகளை பின்பற்றலாம். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

மாதவிடாய் அறிகுறிகள்
பிடிப்பு, உடம்பு வலி மற்றும் அடி வயிற்றில் வலி, இரத்த போக்கு, வீக்கம் போன்றவை தோன்றும். உடலில் இயற்கையாக நடக்கும் செயலுக்கு இடையூறு கொடுப்பது நல்லது அல்ல. ஆனால் இருப்பினும் சில சமயங்களில் தேவைப்பட்டால் மட்டுமே செய்து கொள்ளலாம்.

முதலில் மாதவிடாயை தள்ளிப் போட ஹார்மோன் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இது உங்களுக்கு உடனடியான ஒரு தீர்வை கொடுக்கும். ஆனால் இதில் ஏகப்பட்ட பக்க விளைவுகள் உள்ளன. இந்த பக்க விளைவுகளின் தீவிரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

பக்க விளைவுகள்
அந்த தள்ளி போட்ட மாதவிடாய் சுழற்சியின் போது அதிக இரத்த போக்கு ஏற்படலாம். அதிக வலி ஏற்படும். உடல் மற்றும் மனதில் ஒரு அசெளகரியமான சூழல் நிலவும்.

கருப்பை புற்று நோய்
உங்களுக்கு என்ன தான் அவசரம் என்றாலும் இந்த முறையை பின்பற்றாதீர்கள். ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து இரத்தம் வெளியேற வேண்டும்.

இல்லையெனில் கருப்பை புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் நீங்கள் இதற்கு இயற்கையான முறையை பின்பற்றினால் பக்க விளைவுகள் இல்லாத பலனை பெற இயலும்.

காரசாரமான உணவுகளை தவிருங்கள்
காரசாரமான உணவுகள் உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மாதவிடாய் சுழற்சிக்கு வழி வகை செய்து விடும்.

எனவே நீங்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போட விரும்பினால் காரசாரமான உணவுகளை தவிர்த்திடுங்கள். உதாரணமாக: பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் மிளகு போன்றவற்றை தவிருங்கள்.

சூட்டை கிளப்பும் உணவுகள்
மூலிகைகளின் துளசி, பழங்களில் பப்பாளி, அன்னாசி, முட்டை மற்றும் இறைச்சி போன்ற உடலுக்கு சூடு தரும் உணவுகளை தவிர்த்திடுங்கள். ஒரு 10-15 நாட்களுக்கு இந்த உணவுகளை தவிர்த்து வந்தால் உங்கள் மாதவிடாயை தள்ளிப் போடலாம்.

மன அழுத்தம்
மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒன்னு சீக்கிரம் ஏற்படுத்தும் இல்லையென்றால் தாமதப்படுத்தும். எனவே மன அழுத்தத்தை தவிருங்கள்.

பதப்படுத்தப்பட்ட பருப்பு
நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு பருப்பு உணவுகளை சேர்த்துக் கொண்டு வந்தால் உங்கள் மாதவிடாய் தாமதமாகும்.பருப்பு மென்மையாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.பிறகு அதை அரைத்து பவுடராக்கி அதைக் கொண்டு தினமும் சூப் தயாரித்து பருகவும். உங்கள் மாதவிடாய் தாமதமாக அமையும்.

லெமன் ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து தினமும் படுப்பதற்கு முன் பருகி விட்டு தூங்கவும். இதை சில காலம் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதவிடாய் சுழற்சியை தள்ளி போடுவதோடு உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றும்.

வினிகர்
3-4 ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் வடிகட்டிய நீரில் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு 2-3 தடவை பருகி வந்தால் உங்கள் மாதவிடாய் வர தாமதமாகும். அது மட்டுமல்லாமல் மாதவிடாயின் போது ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் தரும்.

பார்சிலி இலைகள்
கொஞ்சம் தண்ணீரில் சில பார்சிலி இலைகளை போட்டு நன்றாக கொதிக்க விடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை தினமும் இரண்டு தடவை பருகி வந்தால் மாதவிடாயை தாமதமாக வரச் செய்யலாம்.

ஜெலட்டின்
கொஞ்சம் ஜெலட்டினை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை என பருகவும். ஒரு முறை குடித்தால் நான்கு மணி நேரம் மாதவிடாய் தள்ளிப் போகும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே நீங்கள் இதை ஒரு நாளைக்கு 3 முறை என பருகி வந்தால் சில நாட்களுக்கு மாதிவிடாயை தள்ளிப் போடலாம்.

புளி 
15 கிராம் புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொட்டையை நீக்கி விட்டு அதனுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தயாரித்து பருகுங்கள். இவை எளிதாக உங்கள் மாதவிடாயை சில நாட்களுக்கு தள்ளிப் போடும்.

வாழைப்பழம்
2 வாழைப்பழங்கள் மற்றும் 1 கப் தண்ணீர் இதை மட்டும் உங்கள் காலை உணவாக ஒரு 4-5 நாட்களுக்கு எடுத்துக் கொண்டு வாருங்கள். இது உங்கள் மாதவிடாயை 2-3 நாட்களுக்கு தள்ளிப் போட உதவும்.

நீர்ச்சத்து
ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியில் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல நீர்ச்சத்து இருந்தால் உங்கள் மாதவிடாய் சீக்கிரம் வராது. அதே நேரம் உங்கள் உடம்பில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி விடும்.

உடற்பயிற்சி
உங்கள் மன அழுத்தமும் மாதவிடாய் சீக்கிரம் வர அல்லது தள்ளிப் போக காரணமாக அமைகிறது. இந்த மன அழுத்தத்தை நீங்கள் ஒரு சில உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம்.

மன அழுத்தத்தை போக்கும் உடற்பயிற்சிகள் மூலம் எண்டோபின்ஸ் உருவாகி மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம். தினந்தோறும் அரை மணி நேரம் கார்டியோ மற்றும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி தசைகள் விரிவாக்கம் எடை தூக்கும் பயிற்சி(உடற்பயிற்சியாளரின் துணை கொண்டு செய்யுங்கள்) நீச்சலடித்தல் சைக்கிளிங்

குறிப்புகள்
மாதவிடாய் சுழற்சி தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னரே இந்த முறையை கையாளுங்கள். ஏனெனில் உங்கள் ஹார்மோன் மாற்றம் மாதவிடாய் சுழற்சிக்கு முன்னரே துவங்க வேண்டும்.

அதிகமான இரத்த போக்கு,
மன நிலை மாற்றம் மற்றும் அடிக்கடி கட்டி கட்டியாக இரத்தம் வெளியேறுகிறதா என்பதை உறுதி செய்து கொ‌ள்ளு‌ங்க‌ள். மேற்கண்ட முறைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பலன்களை அளிக்கக் கூடும்.

எனவே உங்களுக்கு தகுந்த முறையை மட்டும் தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள். உங்கள் மாதவிடாயை தள்ளிப் போடும் எண்ணத்தை எப்பொழுதும் கடைசியாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில் இயற்கைக்கு முரண்பாடாக நாம் செயல்படுவது நம் உடலுக்கு நல்லது அல்ல. இருப்பினும் நீங்கள் இயற்கை முறையை பின்பற்றினால் அதிகமான பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம். அடிக்கடி மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போடாதீர்கள். அப்போ தான் நீங்களும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

Check Also

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் …