Breaking News
Home / latest-update / மன்னாரில் இளைஞனைக் கொலை செய்த ஆசிரியர்?? நடந்தது என்ன?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

மன்னாரில் இளைஞனைக் கொலை செய்த ஆசிரியர்?? நடந்தது என்ன?

மன்னாரில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8ம் திகதி 29 வயதான இளைஞர் ஒருவர், அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது கொலை எனத் தெரியவந்துள்ளது.

எனவே, மேலதிக விசாரணைகள் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன்பொருட்டு கொழும்பில் இருந்து சென்ற இரகசிய பொலிஸின் விஷேட குழு, அப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்தனர்.

இவரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Check Also

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது. …