Breaking News
Home / latest-update / மட்டக்களப்பு – காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மட்டக்களப்பு – காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல்…!

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இன்று காலை குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி, கடற்கரை வீதியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அலுவலகம் மீது இன்று அதிகாலையில் நேரம் குறித்து வெடிக்கும் (டைம் பாம்) குண்டு மூலமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.




மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவினர் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,குறித்த குண்டு வெடித்திருந்தால் அப்பகுதியில் அதிக சேதங்களை ஏற்படுத்திருக்கும் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.

தேர்தல் முடிவடைந்த நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …