Breaking News
Home / latest-update / மட்டக்களப்பில் ஊமைப் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய 52 வயதுக் காமுகன்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மட்டக்களப்பில் ஊமைப் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய 52 வயதுக் காமுகன்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் விசேட தேவையுடைய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று பகல் கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 32 வயதுடைய வாய் பேசமுடியாத பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த வீட்டில் தாயும் மகளும் வசித்து வந்துள்ளதுடன், தாய் மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 52 வயதுடைய நபர் ஒருவரே குறித்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி பொலிஸார், குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு குற்ற தடவியல் பொலிஸ் பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே. ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …