Breaking News
Home / latest-update / மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தந்தை! அதிரவைக்கும் காரணம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தந்தை! அதிரவைக்கும் காரணம்

பெங்களூர் கல்யாண்நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜோஷி(27). இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பதோடு, மெக்கானிக்காகவும் இருக்கிறார். இவர் மீது பவர்லால் என்பவர் சைபர் கிரைம் பொலிஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், கல்லூரி மாணவியான என் மகளை ஜோஷி காதலித்து வந்துள்ளார். அவளுக்கு காதலர் தினத்தில் உள்ளாடைகளை பரிசளித்து அதனை அணிந்து கொண்டு அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பும் படி ஜோஷி கூறி இருக்கிறார்.




அதன்படி என் மகள் அனுப்பிய வீடியோவை வைத்துக்கொண்டு 15 லட்சம் தரவேண்டும் இல்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.

புகாரைப் பெற்ற சைபர் க்ரைம் பொலிஸார், விசாரணை மேற்கொண்டதில், அந்த இளம்பெண், ஜோஷி வீட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், ஜோஷியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர் பொலிஸார்.

அப்போது, ஜோஷி, “நானும் பவர்லால் மகளும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோம். அது பிடிக்காமல் அவளின் தந்தை பொய் புகார் கொடுத்து இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.




இந்நிலையில், குழம்பிப் போயிருந்த பொலிஸார், பவர்லாலை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இது தந்தைக்கு பிடிக்கவில்லை. மகளை அவளது காதல் கணவனிடம் இருந்து பிரிக்க முடிவு செய்துள்ளார்.

அப்போது, மகள் ஏற்கனவே தன் காதலனுக்கு அனுப்பி இருந்த ஆபாச வீடியோ பவர்லாலுக்கு கிடைத்துள்ளது. இதனை வைத்து அவர்களை பிரிக்க நினைத்த பவர்லால், வீடியோவினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த பழியை மகளின் காதல் கணவர் மீது போட்டுள்ளார்.




தனது ஆபாச படத்தை கணவர் தான் வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிந்தால் மகள் அவனை பிரிந்து வந்துவிடுவாள் என்று கணக்குபோட்டு, அதன்படி மகள் என்றும் பாராமல் அவளது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது சொந்த மகளின் ஆபாச வீடியோவினை தந்தையே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Check Also

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …