Breaking News
Home / latest-update / பெண் மோகம் பிடித்த முகமது ஷமியை கோர்ட்டுக்கு இழுப்பேன் – மனைவி அதிரடி பேட்டி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பெண் மோகம் பிடித்த முகமது ஷமியை கோர்ட்டுக்கு இழுப்பேன் – மனைவி அதிரடி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் சில ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார். அதில், ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் ஷேர் செய்துள்ளார். அதில் மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ளதாக தெரிகிறது. இந்த பேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப்பட்டது.



இதையடுத்து டிவி சேனலுக்கு ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், ஷமியின் காருக்குள் அவரது செல்போன் கிடந்தது, அதை எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்தது. வெகுகாலமாக ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் என்னை துன்புறுத்தி வருகின்றனர்.
சில நாட்களில் அதிகாலை 2 மணிவரை கூட சண்டை சச்சரவுகள் நீடித்துள்ளது, முகமது ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றனர். தனது மகளுக்காக பொறுமை காத்து வந்தேன். ஆனால் ஷமியின் ஆபாச உரையாடல்களை பார்த்த பிறகு பொறுமை காக்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்துள்ளேன், என அவர் கூறினார். இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார்.
தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட தரம்சாலா சென்றுள்ள ஷமி, அங்கிருந்தபடி டுவிட்டரில் இந்த புகார் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை.  எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. எனது புகழை கெடுக்க நடக்கும் முயற்சி இது. எனது விளையாட்டை சீர்குலைக்கும் முயற்சியும் கூட, என கூறியிடுந்தார்.



இந்நிலையில், ஷமியின் மனைவி செய்தியாளர்களிடையே பேசுகையில், அவர் நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்த்தாரோ அவை அனைத்தையும் நான் செய்தேன். ஷமி என்னை அவரது மனைவியாக நடத்தவில்லை, கொடுமைப்படுத்தினார். அவர் பெண் மோகம் உடையவர். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை அவரை விவாகரத்து செய்ய மாட்டேன். என்னிடன் எல்லா ஆதாரங்களும் உள்ளன. அவரை கோர்ட்டுக்கு இழுப்பேன், என கூறினார்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …