Breaking News
Home / latest-update / பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற கருத்து உண்மையானது தான். ஆனால், பெண்கள் செய்யும் சில செயல்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் கூட செய்ய முடியாது.





குட்டை பாவாடை
ஆண்கள் அணியும், பேண்டில் இருந்து, டி-ஷர்ட் வரை பெண்கள் அணிகிறார்கள். லுங்கியை கூட விட்டு வைக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால், பெண்கள் அணியும் ஏதேனும் ஒரு உடையையாவது ஆண்கள் ஆல்ட்டர் செய்து ஃபேஷன் என்ற பெயரில் அணிய முடியுமா?

ஹை-ஹீல்ஸ்
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக ஹை-ஹீல்ஸ் அணிந்தது ஆண்கள் தான் என்ற வரலாறு இருந்தாலும். இப்போதைய நிலைமையில், பெண்கள் அணிவது போல ஆண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து செல்ல முடியுமா? ஆனால், செருப்பு அளவில் கூட ஆண்கள் அணியும் மாடலில் பெண்களுக்கும் செருப்புகள் விற்கப்படுகிறது.




மனநிலை மாற்றம்
பெண்களை போல நொடிக்கு நொடி மனநிலையை மாற்ற ஆண்களால் முடியாது. அப்போது தான் ஒரு தோழியை பற்றி மற்றவரிடம் கடுப்பாக பேசிக்கொண்டிருப்பார்கள், ஆனால, அடுத்த நொடி அந்த தோழி கண்முன் தோன்றினால் கூட உடனே புன்னகை செய்து பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், இது ஆண்களால் முடியாத காரியம்.

மேக்-அப்
ஆண்களால் இது முடியவே முடியாது ரோஸ் பவுடர், கண்மை, லிப்ஸ்டிக் எல்லாம் பூசிக்கொண்டு ஆண் வெளியில் செல்ல முடியும் என்ற எண்ணமே மனதில் எழுவது கடினம்.
நீண்ட கூந்தல் வளர்ப்பது



நமது முன்னோர்கள் நீண்ட கூந்தல் வளர்த்தவர்கள் தான். பெண்களுக்கு இணையாக ஆண்களும் குடுமி போட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டில் “ஷார்ட் கட்” செய்த பெண்களை கூட அதிகம் பார்க்க முடியும் ஆனால், ஆறடி கூந்தல் கொண்டுள்ள ஆண்களை பார்க்கவே முடியாது.

கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை செய்வது
நீங்கள் பெண்களுடன் எங்காவது தனியாக பயணம் மேற்கொண்டிருந்தால் மட்டுமே இதை உணர முடியும். மேப் கையில் இருந்தாலும் கூட, எப்படி போக வேண்டும், வேறு வழி இருக்கிறதா, பாதை சுலபமாக இருக்குமா? என கேள்வியே கண்ணீர்விடும் அளவிற்கு கேள்வி கேட்க பெண்களால் மட்டுமே முடியும்

Check Also

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …